Developed by - Tamilosai
பயணப் பையிலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட பெண்ணின் சடலம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கணவன், மனைவி இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
சப்புகஸ்கந்த மாபிம எண்ணெய் சுத்திகரிப்பு வளாகத்திற்கு அருகில் வீதியில் குப்பைகள் கொட்டுமிடம் ஒன்றிலிருந்து குறித்த பெண்ணின் சடலம் நேற்று முன்தினம் கண்டுபிடிக்கப்பட்டது.
குறித்த சடலம் கை கால்கள் கட்டப்பட்டு பயணப் பையில் வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தீபாவளியன்று இடம்பெற்ற இச்சம்பவம் நாடளாவிய ரீதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையிலேயே குறித்த பெண்ணின் மரணம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இன்று இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.