Developed by - Tamilosai
கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கத் தேவையான சுகாதார வழிகாட்டுதல்களைச் செயற்படுத்த மேலும் நடவடிக்கை எடுக்குமாறு இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.நீண்ட விடுமுறை காலப்பகுதியில் மாகாண பயணக் கட்டுப்பாடுகளை மீறி சிலர் வேறு பிரதேசங்களுக்கு சென்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார் .
பொது மக்களின் செயற்பாடுகள் குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு கூறினார்.
தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
மக்கள் இந்த நேரத்தில் முடிந்தவரை பொது இடங்களில் கூடுவதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
கொவிட் மேலும் பரவாமல் தடுக்க இந்த ஒரு மாத காலம் மிகவும் முக்கியமானது.
மக்கள் இதற்கு ஆதரவளித்தால், அடுத்த மாதத்தில் கொவிட் நிலைமையை எங்களால் இதைவிட குறைக்க முடியும்.
ஆனால் மக்களின் நடத்தையில்தான் கொவிட்டை அதிகரிப்பதா? அல்லது குறைப்பதா? என்பது தங்கியிருப்பதாக இராணுவத் தளபதி தெரிவித்தார்.