தமிழ் ஓசை
தமிழ் ஓசை

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்க வேண்டும் என நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் கையெழுத்து போராட்டத்திற்கு இலங்கை தமிழரசு கட்சி அழைப்பு

0 454

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்க வேண்டும் என நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் கையெழுத்து போராட்டத்திற்கு இலங்கை தமிழரசு கட்சி அழைப்பு விடுத்துள்ளது.

மேலும் குறித்த போராட்டத்தை இம்மாத இறுதிக்குள் நிறைவு செய்ய எதிர்பார்த்துள்ளதாக அக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

அதன் பின்னர் சர்வதேச சமூகத்திடமும் இலங்கை அரசாங்கத்திடமும் குறித்த ஆவணம் ஒப்படைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

யாழ்ப்பாணத்திலுள்ள அவரது இல்லத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதனைக் குறிப்பிட்டார்.

மேலும் குறித்த கையெழுத்து போராட்டத்தில் அனைத்து கட்சிகளையும் பங்கேற்குமாறு மாவை சேனாதிராஜா அழைப்பு விடுத்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.