Developed by - Tamilosai
அரசினால் முன்மொழியப்பட்டிருக்கும் பயங்கரவாதத்தடைச்சட்டத்திருத்தங்களை
தாம் ஏற்றுக்கொள்ளவில்லை என்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
எனவே, பயங்கரவாத தடைச்சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும் எனவும் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.
அத்துடன், ‘பயங்கரவாதம்’ என்ற குற்றம் அதற்கான புதிய வரைவிலக்கணத்துடன் தண்டனைச் சட்டகோவையில் உள்ளக்கப்பட வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ள மனித உரிமைகள் ஆணைக்குழு, பயங்கரவாதம் தொடர்பான விசாரணைகள் அவசியமான திருத்தங்களுடன் நாட்டின் பொதுச்சட்டத்தின் கீழேயே முன்னெடுக்கப்பட வேண்டும்
எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.