தமிழ் ஓசை
தமிழ் ஓசை

பயங்கரவாத அச்சுறுத்தல்; இலங்கையில் உருவானது உயர்தரப் பாதுகாப்புப் படையணி

0 239

 பயங்கரவாத அச்சுறுத்தல்கள் அல்லது வேறு எந்தவொரு தேசிய அவசர நிலைகளையும் எதிர்கொள்ளும் செயற்பாடுகளுக்கு பலம் சேர்க்கும் வகையில் உயர்தர இராணுவப் படையணியாக புதிய படையணியொன்று  உருவாக்கப்பட்டுள்ளது.

இலங்கை இராணுவத்தின் சிறப்பு நடவடிக்கை படைப்பிரிவு, விசேட அதிரடிப் படையணி மற்றும் ஏனைய படையணிகள் ஆகியவற்றை இணைத்து ‘முதலாவது இலங்கை இராணுவப் படையணி’ உருவாக்கப்பட்டுள்ளது. 

இதன் அங்குரார்ப்பண நிகழ்வு சாலியபுர கஜபா படையணித் தலைமையகத்தில்  இடம்பெற்றது.

இராணுவத் தளபதியின் முன்னோக்கு வழி மூலோபாய 2020 – 2025 திட்டக் கொள்கையின் ஒரு அங்கமாகவே இது முன்னெடுக்கப்பட்டுள்ளது. 


இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவின் அழைப்பின் பேரில், பாதுகாப்புச் செயலாளர்  குணரத்ன,  ஆரம்ப நிகழ்வின் பிரதம விருந்தினராக கலந்துகொண்டதுடன் அவருக்கு இராணுவ சம்பிரதாய முறையின் பிரகாரம் இராணுவ அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.