Developed by - Tamilosai
பயங்கரவாதத்துடன் தெளிவான தொடர்புகள் இருந்தால் மாத்திரம் பயன்படுத்துமாறும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பொலிஸாருக்கு பணிப்புரை
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை தவறாகப் பயன்படுத்த வேண்டாம் என்றும் பயங்கரவாதத்துடன் தெளிவான தொடர்புகள் இருந்தால் மாத்திரம் பயன்படுத்துமாறும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் விசாரணைகளை கைவிடுவதற்கு பயங்கரவாத தடைச்சட்டத்தை தவறாக பயன்படுத்த வேண்டாம் என ஜனாதிபதி பொலிஸாரிடம் கூறியதாக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதத் தடைச் சட்டம் தொடர்பாக பொறுப்பற்ற பயன்பாடு நிறுத்தப்பட வேண்டும் என்று அரசாங்கம் தெளிவான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதாகவும் அது நடக்கிறதா இல்லையா என்று ஒரு வாய்ப்பு கொடுத்துப் பார்ப்போம் என்றும் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.