Developed by - Tamilosai
பப்புவா நியூ கினியாவில் பகுதியில் நேற்று காலை ஏற்பட்ட சக்கிவாய்த்த நிலநடுக்கத்தில் கட்டிடங்கள் சேதமடைந்ததுடன் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளது. இது குறித்து அந்நாட்டு பாராளுமன்ற உறுப்பினர் தெரிவிக்கையில் மலைக் கிராமப் பகுதியில் 2 பேர் இறந்துள்ளதாகவும், 4 பேரைப் பலத்த காயங்களுடன் மீட்டு சிகிச்சை அளிப்பதாகவும் தெரிவித்தார்.மேலும் வாவ், கொரங்க வண்டல் சுரங்க பகுதியில் வேலை செய்த 3 பேர் மண்ணில் புதைத்துள்ளதாகவும் அவர்களை மீட்கும் பணி நடைபெற்றுவருவதாகவும் தெரிவித்துள்ளார்.
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது ஆனால் குறைத்த அளவே அதற்கு வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் காணொளி காட்சி வெளியாகியுள்ளது. அதில் வீடுகள், சாலைகள் பிளப்பதைத் தெளிவாகப் பார்க்க முடிகிறது.
இந்த நிலநடுக்கத்தால் பயங்கர சேதம் ஏற்பட்டுள்ளது. பல பேரின் வீடுகள் சேதமடைந்துள்ளது. இந்த நிலையில் சேதாரங்கள் குறித்துச் சரியாகத் தகவல் தெரியவில்லை. பல பகுதிகளில் மின்சார சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. பப்புவா நியூ கினியா பிரதமர் ஜேம்ஸ் மராப், இந்த நிலநடுக்கம் மிகப் பெரிய அளவில் தாக்கியுள்ளது. ஆனால் 2018 வந்த நிலநடுக்கத்துடன் சேதம் குறைவாகவே இருக்கும் என்று கூறியுள்ளார்.