Developed by - Tamilosai
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளுக்கு கிடைத்த முறைப்பாடுகளின் அடிப்படையில் ருமேனியாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணத்தை மோசடி செய்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண் கைது செய்யப்பட்டபோது குறித்த இடத்தில் 23 வெளிநாட்டு கடவுச்சீட்டுகள் மற்றும் பல ரோமானிய வேலை விண்ணப்பங்களையும் கண்டுபிடித்தனர்.
ருமேனியாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி சந்தேகநபர் ஒரு கோடி ரூபாவுக்கு மேல் மோசடி செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.