Developed by - Tamilosai
முச்சக்கரவண்டியில் வருகை தந்த இருவர் மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.இவர்களில் ஒருவரின் இரண்டு கைளும் இரண்டு துண்டாக வெட்டப்பட்டுள்ளதுடன் மற்றுமொருவரின் ஒரு கை துண்டாக வெட்டப்பட்டுள்ளது.
பண்டாரகம, வல்கம பகுதியில் இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இரு கைகளும் துண்டாக்கப்பட்ட நபர் பாதையில் ஓடிச் சென்று கீழே விழுந்துள்ள போதிலும் அவருக்கு உதவி செய்ய யாரும் வரவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
மற்றைய நபர் பொலிஸ் நிலையத்திற்கு ஓடிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அண்மையில் விளக்கமறியலில் இருந்து வௌியில் வந்த ஒருவரே இவ்வாறு தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தாக்குதலை மேற்கொண்டவர் மற்றும் தாக்குதலுக்குள்ளானவர்கள் அனைவரும் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வருபவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
தாக்குதலுக்குள்ளானவர்களின் முச்சக்கரவண்டியிலும் கூரிய ஆயுதங்கள் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பில் பண்டாரகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.