தமிழ் ஓசை
தமிழ் ஓசை

பட்ஜெட் இரண்டாம் வாசிப்பு மீதான மூன்றாம் நாள் விவாதம் இன்று!

0 157

 2022 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான மூன்றாம் நாள் விவாதம் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெறுகிறது.

இதன்படி, இன்று முற்பகல் 9.30 மணியளவில் நாடாளுமன்ற அமர்வுகள் ஆரம்பமாகின.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான கூட்டணி அரசாங்கத்தின் 2022ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் கடந்த வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும், நிதி அமைச்சருமான பசில் ராஜபக்ஷ, வரவு – செலவுத் திட்டத்தை முன்வைத்து உரையாற்றினார்.

பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்கள், வரிக்கொள்கைகள், மக்கள் நலத்திட்டங்கள் உட்பட வரவு – செலவுத் திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்களை தமது உரையின்போது நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெளிவுபடுத்தியிருந்தார்.

இதனையடுத்து, 2ஆம் வாசிப்பு மீதான விவாதம் ஆரம்பமாகியது. இந்த நிலையில், இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நவம்பர் 22ஆம் திகதி நடைபெறவுள்ளது.

அதன்பின்னர், 23ஆம் திகதி முதல் குழுநிலை விவாதம் ஆரம்பமாகவுள்ள நிலையில், டிசெம்பர் 10 ஆம் திகதி வரவு – செலவுத்திட்டம் மீதான இறுதி வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.