Developed by - Tamilosai
திருகோணமலை, கிண்ணியா பிரதேசத்தில் குறிஞ்சங்கேணி பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற படகு விபத்துடன் தொடர்புடைய மேலும் ஒரு உயிரிழப்பு இடம்பெற்றுள்ளது.
குறித்த படகு விபத்தில் சிக்கி, மீட்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 6 வயதுடைய சிறுமியே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
2021 நவம்பர் 23 காலை 07.30 மணியளவில் குறிஞ்சங்கேணி பாலத்திற்கு அருகில் மக்கள் குழுவொன்றை ஏற்றிச் சென்ற படகொன்று விபத்துக்குள்ளானது.
இதில் ஆறு பேர் உயிரிழந்த நிலையில் பலர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
இந் நிலையில் அது தொடர்பில் மேலும் ஒரு உயிரிழப்பு இன்று உறுதிபடுத்தப்பட்ட நிலையில், பலியானோரின் எண்ணிக்கை மொத்தம் 7 ஆக உயர்ந்துள்ளது.