Developed by - Tamilosai
இலங்கைக்கு அப்பால் உள்ள கடற்பரப்பில் கைப்பற்றப்பட்ட பல நாள் மீன்பிடி இழுவை படகில் 225 கிலோகிராம் ஹெரோயின் கண்டுபிடிக்கப்பட்டதை இலங்கை கடற்படை உறுதிப்படுத்தியுள்ளது.
குறித்த பல நாள் மீன்பிடி இழுவை படகு ஒன்றை கடற்படையினர் நேற்று தடுத்து நிறுத்தியதாக தகவல் வெளியானது.
இதனைத் தொடர்ந்தே கடற்படையினர் இன்று அந்த தகவலை உறுதிபடுத்தினர்.
மேலும், அரச தகவல் சேவையிலிருந்து (SIS) கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து கடற்படையின் சிறப்பு நடவடிக்கையின் விளைவாக இந்த இடைமறிப்பு ஏற்பட்டது.
கைது செய்யப்பட்ட இழுவை படகு மற்றும் படகில் இருந்த ஐந்து பேரும் சட்ட நடவடிக்கைக்காக கொழும்பு துறைமுகத்திற்கு அழைத்துவரப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதனடிப்படையில், மீன்பிடித் துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட பின்னர், அவர்களிடம் முன்னெடுக்கபட்ட முழுமையான தேடுதலில் 180 கிலோ மற்றும் 800 கிராம் எடையுள்ள 160 ஹெரோயின் பொதிகள் மற்றும் 31 கிலோ மற்றும் 512 கிராம் எடையுள்ள கிரிஸ்டல் மெத்தாம்பெட்டமைன்(ஐஸ் போதைபொருள்) 28 பொதிகள் மீட்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.