தமிழ் ஓசை
தமிழ் ஓசை

பசில் ராஜபக்ச , அஜித் குமார் ஆகியோருக்கு இடையில் சந்திப்பு

0 225

நிதியமைச்சர் பசில் ராஜபக்ச மற்றும் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் குமார் டோவல் ஆகியோருக்கு இடையில் இன்று சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பு புதுடில்லியில் இடம்பெற்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பசில் ராஜபக்ச இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ள நிலையில், இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் டோவல் , அமைச்சர் பசில் ராஜபக்சவுடன் மிகவும் சுமுகமான உரையாடலில் ஈடுபட்டதுடன், இரு நாடுகளின் பரஸ்பர மூலோபாய நலன்கள் தொடர்பான பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடினார்.

இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட மற்றும் திறைசேரியின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல ஆகியோர் அமைச்சருடன் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டனர்.

அஜித் குமார் டோவல் இந்தியாவின் ஐந்தாவது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஆவார். அவர் அமைச்சரவை அந்தஸ்து கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.