Developed by - Tamilosai
நிதியமைச்சர் பசில் ராஜபக்சவின் திடீர் இந்திய விஜயம் தொடர்பான அனைத்து விவரங்களையும் வெளியிட வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் வரவு – செலவுத் திட்ட விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
அடுத்த வருடத்திற்கான வரவு – செலவுத் திட்டம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில், நிதியமைச்சரின் திடீர் இந்திய விஜயம் கவலையளிக்கின்றது.
வரவு – செலவுத் திட்டம் மீதான விவாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது எந்தவொரு நிதி அமைச்சரும் நாட்டை விட்டு வெளியேறியதில்லை.
நாட்டின் பொருளாதார மீட்சிக்கான அனைத்து நிதி விவரங்கள் மற்றும் திட்டங்களை சபையில் முன்வைக்கும் பொறுப்பு அரசாங்கத்திற்கும் நிதி அமைச்சருக்கும் உள்ளது.
ஆனால் நாட்டின் தற்போதைய வெளிநாட்டு கையிருப்பை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு அரசாங்கத்திடம் சில நாட்களுக்கு முன்னர் கோரிக்கை விடுத்திருந்த போதிலும், அதற்கான ஆவணம் இன்னும் சமர்ப்பிக்கப்படவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.