தமிழ் ஓசை
தமிழ் ஓசை

பங்காளிகள் ஏன் எதிர்க்கின்றனர்? பெரமுன கேள்வி

0 162

அமெரிக்க நிறுவனத்துடன் கைச்சாத்திடப்பட்டுள்ள யுகதனவி மின்நிலைய பங்குகள் தொடர்பிலான ஒப்பந்தம் சிறந்த முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டால் தேசிய மட்டத்தில் மின்கட்டணத்தை 25 சதவீதத்தால் குறைக்க முடியும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர், பாராளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

பங்காளிக் கட்சியினர் எதனடிப்படையில் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்தை எதிர்க்கிறார்கள் என்பதை அவர்கள் மக்களுக்குப் பகிரங்கப்படுத்த வேண்டும்.

போலியான குற்றச்சாட்டுக்களுக்காக அபிவிருத்திப் பணிகளைக் கைவிட முடியாது என்றும்  அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.