தமிழ் ஓசை
தமிழ் ஓசை

பங்களாதேஷ் மீண்டும் தோல்வி!மேற்கிந்திய தீவுகள் வெற்றி

0 96

 ரி- 20 உலகக்கிண்ணத் தொடரின் இன்று இடம்பெற்ற போட்டியில் பங்களாதேஷ் அணியை எதிர்த்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 3 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் களத்தடுப்பைந் தேர்ந்தெடுத்தது.

இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 142 ஓட்டங்ளைப் பெற்றது.

அவ்வணி சார்பில் நிக்கொலஸ் பூரன் 40 ஓட்டங்களையும், ரோஸ்டன் சேஸ் 39 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

பந்து வீச்சில் மஹேதி ஹசன், முஸ்தாபிசூர் ரஹ்மான் மற்றும் ஷோரிஃபுல் இஸ்லாம் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் வீழ்த்தினர்.

இதன்படி, 143 என்ற வெற்றி இலக்கை நோக்கிப் பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 139 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.

பங்களாதேஷ் அணி சார்பில் லிப்டன் தாஸ் அதிகபட்சமாக 44 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். அணித்தலைவர் மொஹமதுல்லாஹ் 31 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

Leave A Reply

Your email address will not be published.