தமிழ் ஓசை
தமிழ் ஓசை

பங்களாதேஷ் படுதோல்வி! இங்கிலாந்து இலகு வெற்றி!!

0 134

இங்கிலாந்து மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் இன்று இடம்பெற்ற ரி- 20 உலகக்கிண்ண சுப்பர் 12 சுற்றுப் போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் இலகு வெற்றியைப் பதிவு செய்தது.

போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 124 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

அந்த அணி சார்பில் முஷ்பிகுர் ரஹீம் 29 ஓட்டங்களையும், மொஹமதுல்லாஹ் 19 ஒட்டங்களையும் அதிகபட்சமாகப் பெற்றுக் கொண்டனர்.

நஷூம் அஹமட் ஆட்டமிழக்காமல் 19 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

பந்து வீச்சில் டைமல் மில்ஸ் மூன்று விக்கெட்டுக்களை அதிகபட்சமாக வீழ்த்தினார்.

இந்நிலையில், 125 என்ற வெற்றி இலக்கை நோக்கிப் பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 14.1 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை இழந்து 126 ஓட்டங்களைப் பெற்று வெற்றி இலக்கை அடைந்தது.

இங்கிலாந்து அணி சார்பில் ஜேசன் ரோய் 60 ஓட்டங்களை அதிகபட்சமாகப் பெற்றுக் கொண்டார்.

டேவின் மலான் ஆட்டமிழக்காது 28 ஓட்டங்களையும், ஜோஸ் பட்லர் 18 ஒட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.