Developed by - Tamilosai
உலக கிண்ண இருபதுக்கு 20 தொடரின் முதல் சுற்றுக்கான நேற்றைய 6 ஆவது போட்டியில் பங்களாதேஷ் அணி, 26 ஓட்டங்களால் ஓமான் அணியை வெற்றிக்கொண்டுள்ளது.
போட்டியில் நாணய சுழற்ச்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 153 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
இந்த நிலையில் 154 என்ற வெற்றியிலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய ஓமான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து 127 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியடைந்தது.
போட்டியின் சிறப்பாட்டக்காரராக பங்களாதேஷ் அணியின் சஹிப் அல் ஹசன் தெரிவானார்.