தமிழ் ஓசை
தமிழ் ஓசை

பங்களாதேஷை வீழ்த்தி இலங்கை அபார வெற்றி!

0 140

 உலகக் கிண்ண ரி – 20 தொடரில் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் இன்று இடம்பெற்ற போட்டியில் இலங்கை அணி 5 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது.

இதனடிப்படையில் முதலில் களமிறங்கிய பங்களாதேஷ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 171 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

பந்து வீச்சில் சமிக கருணாரத்ன, பினுர பெர்னாண்டோ மற்றும் லஹிரு குமார ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

பங்களாதேஷ் அணி சார்பில் மொஹமட் நயீம் 62 ஓட்டங்களையும், முஸ்தபிஷுர் ரஹீம் ஆட்டமிழக்காமல் 57 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

இதற்கமைய, 172 என்ற வெற்றி இலக்கை நோக்கிப் பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 18.5 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

இலங்கை அணி சார்பில் அதிரடியாக துடுப்பெடுத்தாடிய சரித் அசலங்க ஆட்டமிழக்காது 80 ஓட்டங்களைப் பெறறுக்கொணடார்.

பாணுக்க ராஜபக்ஷ 53 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

பந்து வீச்சில் சஹிப் அல் ஹசன் மற்றும் நசும் அஹமட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.

Leave A Reply

Your email address will not be published.