தமிழ் ஓசை
தமிழ் ஓசை

பங்களாதேஷை வீழ்த்திய பாகிஸ்தான்

0 74

2023 – உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று இடம்பெற்ற போட்டியில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட்டுக்களால் வெற்றிப் பெற்றுள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 45.1 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களை இழந்து 204 ஓட்டங்களை பெற்றது.

துடுப்பாட்டத்தில் பங்களாதேஷ் அணியின் சார்பில் Mahmudullah அதிகபட்சமாக 56 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார்.

பந்து வீச்சில் பாகிஸ்தான் அணி சார்பில் Shaheen Shah Afridi, Mohammad Wasim தலா 3 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

இதன்படி, 205 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 32.3 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

பாகிஸ்தான் அணி சார்பில் Abdullah Shafique 68 ஓட்டங்களையும், Fakhar Zaman 81 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக் கொண்டனர்

Leave A Reply

Your email address will not be published.