தமிழ் ஓசை
தமிழ் ஓசை

பக்கபலமாக இந்தியா எப்போதும் இருக்கும்

0 172

மலையக மக்களை பாதுகாத்து அவர்களின் பக்கபலமாக இந்தியா எப்போதும் இருக்கும் என இலங்கைக்கான இந்திய தூதுவர் கோபால் பக்லே தெரிவித்துள்ளார்.

மலையக பாரம்பரிய கலை, கலாசார நிகழ்வுகளுடன் தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஏற்பாட்டில் நேற்று நுவரெலியா சினிசிட்டா மைதானத்தில் ஆண்டுக்கான தைப்பொங்கல் விழா வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இலங்கைக்கான இந்திய தூதுவர் கோபால் பக்லே மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

´மலையக மக்களுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவு வரலாற்று முக்கியதுவமிக்கது. கடந்த 2017 ஆம் ஆண்டு இந்திய பிரதமர் நோர்வூட் மைதானத்திற்கு வந்தது வரலாற்று முக்கியதுவமிக்கது. அன்று பிரதமர் மோடிக்கு நீங்கள் கொடுத்த அன்பு, பாசம் என்பவை முக்கியமானவை. அதற்கு இந்தியா எப்போதும் நன்றியுடன் இருக்கும். தாய் தன் பிள்ளையை ஒரு போதும் மறப்பதில்லை அல்லவா? அதேபோன்றுதான் தாய் இந்தியா தனது பிள்ளைகளை ஒரு போதும் மறக்காது.

Leave A Reply

Your email address will not be published.