Developed by - Tamilosai
அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு , எரிபொருள் உட்பட பல பொருட்களுக்கு நிலவும் தட்டுப்பாடு காரணமாக கொதிப்படைந்துள்ள மக்கள் நேற்று நாடளாவிய ரீதியில் வீதிக்கு இறங்கி போராட ஆரம்பித்துள்ளனர்.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்பேற்று அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவும், அரசாங்கமும் பதவி விலக வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.