தமிழ் ஓசை
தமிழ் ஓசை

நேற்று இளைஞர் ஒருவர் மீட்பு

0 40

புத்தளம் நகரில் உள்ள அரச திணைக்களம் ஒன்றுக்கு சொந்தமான விடுதியொன்றில் இருந்து இளைஞர் ஒருவர் நேற்று (15) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

புத்தளம் நகரைச் சேர்ந்த மரியதாஸ் கிருஷாந்த (வயது 23) எனும் இளைஞரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த இளைஞன் நேற்று காலை 6 மணிக்கும் 6.30 இற்கும் இடைப்பட்ட நேரத்தில் அரச திணைக்களம் ஒன்றுக்கு சொந்தமான விடுதியிலுள்ள குளியலறையில் வைத்து விற்றராசினை கையில் எடுத்து தனது இரண்டு கைகளினாலும் நேராக இழுக்க முற்பட்ட போதே இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளதாக மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

தனது இரண்டு கைகளாலும் தனது சக்தியை பயன்படுத்தி விற்றராசினை இழுத்த போது, குறித்த தராசின் முன்பக்கமாக உள்ள கூர்மையான பகுதி இளைஞனின் கழுத்தில் குத்தி கடுமையாக காயப்படுத்தியுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

குறித்த இளைஞன் குளியலறையில் இரத்தக் காயங்களுடன் காணப்பட்டதை அடுத்து, அங்கிருந்த குடும்பத்தினர் அந்த இளைஞனை உடனடியாக புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரவித்துள்ளனர்.

இதனையடுத்து, சம்பவம் தொடர்பில் புத்தளம் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸாரும், பொலிஸ் தடயவியல் பிரிவினரும் சம்பவ இடத்தில் விசாரணைகளை முன்னெடுத்தனர்

அத்துடன், புத்தளம் மாவட்ட பதில் நீதிவான் எம்.எம்.இக்பால், சம்வம் இடத்திலும், வைத்தியசாலையிலும் நீதிவான் விசாரணையை நடத்தியதுடன், பிரேத பரிசோதனையின் பின்னர் சடலத்தை தந்தையிடம் ஒப்படைக்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.

இந்த சம்பவம் புத்தளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.