Developed by - Tamilosai
நெற்செய்கை மேற்கொள்ள முடியாத பயிர்நிலங்களில் பாசிப்பயறு செய்கையை மேற்கொள்வதற்கு அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்குவதற்கு அரசாங்கம் எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் செயற்பாடுகளை கண்காணித்த போது கிடைத்த தகவல்களை கருத்திற்கொண்டு ஜனாதிபதி இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
நீர்ப்பாசன வசதிகள் இன்மையால், சிறுபோகத்தில் நெற்செய்கையை மேற்கொள்ள முடியாத காணிகளில் இடைப்போகத்தின் மேலதிக பயிராக பாசிப்பயரை பயிரிடுமாறு ஜனாதிபதி கூறியுள்ளார்.
பாசிப்பயறு செய்கைக்கு தேவையான விதைகளை பெற்றுக் கொள்வதற்கு விவசாயிகளுக்கு நிதி உதவிகளை வழங்குமாறு விவசாய அமைச்சுக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.