தமிழ் ஓசை
தமிழ் ஓசை

நுவரெலியாவில் லாப் எரிவாயு விநியோகம்!

0 70

இன்று(15) நுவரெலியா மக்களுக்கு  லாப் எரிவாயு கொள்கலன்கள் பொலிஸாரின் பாதுகாப்பிற்கு மத்தியில் வழங்கப்பட்டு வருகின்றன.

பொதுமக்கள் அதனை பெற்றுக்கொள்வதற்காக அதிகாலை 4 மணியில் இருந்து நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.

இரு மாதங்களுக்கு மேலாக லாப் எரிவாயு கொள்கலன்கள் வழங்கப்படவில்லை.

இந்நிலையில் இன்று நுவரெலியா மின்சார சபை கட்டிடத்திற்கு முன்பாக லாப் எரிவாயு கொள்கலன்கள் விநியோகம் இடம்பெறுகின்றது.

இதன்போது லாப் எரிவாயு கொள்கலன் விற்பனை முகவர்களால் சுமார் 1150 எரிவாயு கொள்கலன்கள் எடுத்து வரப்பட்டுள்ளன.

அவற்றை கடும் நெருக்கடிக்கு மத்தியில் நுவரெலியா, பொரலாந்த, கந்தபளை, மாகஸ்தோட்டம், நானுஒயா உள்ளிட்ட பல பகுதிகளிலிருந்து வருகை தந்த பொது மக்களுக்கு பொலிஸாரின் மேற்பார்வையில் வழங்கியுள்ளனர்.

எனினும் அனைத்து வாடிக்கையாளர்களினதும் தேவைக்கு ஏற்ப சமையல் எரிவாயுவை பெற்றுக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதன் போது நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் தொழில் புரிவோருக்கு எரிவாயு கொள்கலன்கள் வழங்கப்பட்டமையால் அங்கு அமைதியின்மை ஏற்பட்டமை குறிப்பிடதக்கவிடயமாகும்.

Leave A Reply

Your email address will not be published.