Developed by - Tamilosai
சீரற்ற காலநிலை காரணமாக நுவரெலியா நகரில் வர்த்தக நிலையங்களும், விவசாய நிலங்கள் அதிகமாகப் பாதிப்பை எதிர்கொண்டுள்ளன.
நுவரெலியாவில் பெய்த கடும் மழையால் கந்தப்பளை பிரதேசத்தில் அதிகமான விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
அதேநேரம் அங்கு வர்த்தக நிலையங்களில் வெள்ள நீர் புகுந்ததால் வியாபாரமும் பாதிக்கப்பட்டது
இதேவேளை, பனிமூட்டம் மற்றும் மழையுடனான காலநிலை காரணமாக வாகனங்களில் பயணிக்கும்போது சாரதிகள் முகப்பு விளக்குகளை ஒளிரச் செய்து போக்குவரத்தில் ஈடுபடுமாறு நுவரெலிய போக்குவரத்து பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.