தமிழ் ஓசை
தமிழ் ஓசை

நீர்வேலியில் வீடொன்றில் வாள்வெட்டுக் குழு அட்டகாசம்!

0 481

 யாழ்ப்பாணம் நீர்வேலியிலுள்ள வீடொன்றுக்குள் நுழைந்த வாள் வெட்டுக்குழு தாக்குதலை மேற்கொண்டுள்ளது.

 நீர்வேலி தெற்கு ஜே/ 268 கிராம சேவையாளர் பிரிவிலுள்ள வீடொன்றினுள் நேற்றைய தினம் (வியாழக்கிழமை) இரவு புகுந்த வாள் வெட்டுக் குழு, வீட்டிலிருந்த பொருட்களை அடித்து உடைத்துவிட்டு தப்பிச் சென்றுள்ளது.

மோட்டார் சைக்கிளில், வாள்கள், கம்பிகள் உள்ளிட்ட கூரிய ஆயுதங்களுடன் வந்த 4 பேர் கொண்ட கும்பலே இவ்வாறு தாக்குதலை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

முப்படைகள், பொலிஸாரை சந்தித்து யாழில் இயங்கும் வாள் வெட்டுக்குழுக்களை அடக்குவேன் என வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா கலந்துரையாடிய சில மணி நேரங்களில் இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.