Developed by - Tamilosai
வெல்லவாய – எல்லவல நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு – காத்தான்குடியைச் சேர்ந்த தந்தையும், அவரது பிள்ளைகள் இருவருமே இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
குறித்த சம்பவம் இன்று புதன்கிழமை பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவத்தில் 38 வயது தந்தையும், 15 வயது மகன் மற்றும் 11 வயது மகள் ஆகியோரே உயிரிழந்தவர்களாவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.