தமிழ் ஓசை
தமிழ் ஓசை

நீதி கோரி மக்களோடு மக்களாக வீதிக்கு இறங்கிய மஹிந்த

0 442

றம்புக்கனை பகுதியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி உயிரிழந்த இளைஞருக்கு நீதி கோரி தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக நாடு முழுவதும் மக்கள் போராட்டம் வெடித்துள்ளது. ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டவர்கள் உடன் பதவி விலக வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொருளாதார நெருக்கடி காரணமாக பொருட்களின் விலை நாளுக்கு நாள் விண்ணை தொடும் அளவிற்கு உயர்கின்றன.

இதனை கண்டித்து அண்மையில் றம்புக்கனை பகுதியில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. இதன்போது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் கொல்லப்பட்டதுடன், 10க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.உயிரிழந்த இளைஞரின் இறுதி கிரியைகள் நேற்றைய தினம் இடம்பெற்றிருந்தது. இந்நிலையில், பொலிஸாரால் கொல்லப்பட்ட மற்றும் காயமடைந்த ஆர்ப்பாட்டக்காரருக்கு நீதி கோரி தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இன்று அம்பலாங்கொடையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.

Leave A Reply

Your email address will not be published.