தமிழ் ஓசை
தமிழ் ஓசை

நீதிபதிகள் மற்றும் நீதவான்கள் உட்பட 118 நீதித்துறை அதிகாரிகளை இடமாற்றம்-நீதிச்சேவை ஆணைக்குழு

0 452

நீதிபதிகள் மற்றும் நீதவான்கள் உட்பட 118 நீதித்துறை அதிகாரிகளை இடமாற்றம் செய்ய நீதிச்சேவை ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

வருடாந்த இடமாற்ற நடைமுறையின் கீழ் இந்த இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, இந்த ஆண்டு ஏப்ரல் 04 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் குறித்த இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இடமாற்றங்கள் தொடர்பான மேன்முறையீடுகளை மார்ச் 18ஆம் திகதிக்கு முன்னர் மேற்கொள்ள முடியும் என நீதிச்சேவை ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

இவ்வருட வருடாந்த இடமாற்ற நடவடிக்கையின் விளைவாக கொழும்பு நீதவான் நீதிமன்றம் உட்பட நாடளாவிய ரீதியில் பல முக்கிய நீதிமன்றங்களுக்கு நீதவான்கள், மாவட்ட நீதிபதிகள் மற்றும் மேலதிக மாவட்ட நீதிபதிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.மேலும், 27 பயிற்சி பெற்ற நீதித்துறை அதிகாரிகள் இந்த ஆண்டு வருடாந்த இடமாற்றத் திட்டத்தின் கீழ் நீதவான்கள், மாவட்ட நீதிபதிகள் மற்றும் மேலதிக மாவட்ட நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளதாக நீதிச்சேவை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.