Developed by - Tamilosai
நிலையான தீர்வுகளை அடைவதற்கு இலங்கையுடன் இணைந்து செயற்படுவதற்கு இலங்கை தூதுக்குழு சாதகமாக பதிலளித்துள்ளது – நிதி அமைச்சர்
நிதி அமைச்சர் அலி சப்ரி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குனரான கிறிஸ்டலினா ஜேர்ஜிவா இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நிலையான தீர்வுகளை அடைவதற்கு இலங்கையுடன் இணைந்து செயற்படுவதற்கு இலங்கை தூதுக்குழு சாதகமாக பதிலளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை பிரதிநிதிகள் இன்று முதல் கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளனர்.
வரும் 24 ஆம் திகதி வரை வாஷிங்டனில் கலந்துரையாடல் நடைபெற உள்ளது.
இலங்கைக்கான கடன் சலுகையைப் பெற்றுக் கொள்வது தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளது.
நிதியமைச்சர் அலி சப்ரி, மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க, நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன மற்றும் தூதுக்குழுவினர் இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்டுள்ளனர்.