தமிழ் ஓசை
தமிழ் ஓசை

நிலவும் சீரற்ற வானிலை – சங்கானையில் 38 குடும்பங்கள் பாதிப்பு

0 101

யாழ்.மாவட்டத்தில் நேற்றுத் திங்கட்கிழமை இரவு முதல் பெய்து வரும்  அதிக மழை காரணமாக சங்கானை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட 38 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.

சங்கானை பிரதேச செயலகப் பிரிவின் j/179 கிராம சேவகர் பிரிவில் 38 குடும்பங்களைச் சேர்ந்த 118 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் 4 குடும்பத்தினர் உறவினர்கள் வீடுகளில் தங்கியுள்ளனரென தெரிவிக்கப்படுகின்றது.

யாழ். மாவட்டத்தில் வளிமண்டலத்தில் ஏற்பட்ட தாக்கம் காரணமாக 200 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, யாழ்ப்பாணம் மாவட்ட பாடசாலைகளுக்கு இன்று(செவ்வாய்கிழமை) விடுமுறை வழங்கப்படுவதாக மாவட்டச் செயலாளர் க.மகேசன் அறிவித்துள்ளார் என்பதுறொக் குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.