தமிழ் ஓசை
தமிழ் ஓசை

நியூசிலாந்தை தோற்கடித்து பாகிஸ்தான் இரண்டாவது வெற்றி!

0 80

 ரி-  20 உலகக்கிண்ண சுப்பர் 12 சுற்றில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் இன்று இடம்பெற்ற போட்டியில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட நியூசிலாந்து அணிக்கு அழைப்பு விடுத்தது.

இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 134 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

நியூசிலாந்து அணி சார்பில் மிர்செல் 27 ஓட்டங்களையும், கேன் வில்லியம்சன் 25 ஓட்டங்களையும் மற்றும் டெவோன் கன்வே 27 ஓட்டங்களையும் அதிகபட்சமாகப் பெற்றுக் கொண்டனர்.

பாகிஸ்தான் அணி சார்பில் ஹரிஸ் ரவூப் அதிகபட்சமாக 4 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

பதிலுக்கு 135 என்ற வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 18.4 ஓவர்கள் நிறைவில் வெற்றி இலக்கை அடைந்தது.

பாகிஸ்தான் அணி சார்பில் மொஹமட் ரிஸ்வான் அதிகபட்சமாக 33 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

சொய்ப் மலிக் ஆட்டமிழக்காது 26 ஓட்டங்களையும் அசிப் அலி ஆட்டமிழக்காது 27 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

பந்து வீச்சில் ஹிஸ் சௌதி இரண்டு விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார்.

இதற்கமைய, பாகிஸ்தான் தான் இதுவரை விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று நான்கு புள்ளிகளைப் பெற்றது.

Leave A Reply

Your email address will not be published.