Developed by - Tamilosai
யுத்தத்தினால் உயிர்நீத்தவர்களை நினைவுக்கூறும் உரிமையை அரசாங்கத்தினால் தொடர்ச்சியாக தடுக்க முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை தற்போதைய அரசாங்கத்தை பொறுத்தமட்டில் பெரும்பான்மையினருக்கு ஒரு சட்டம். தமிழ் மக்களுக்கு ஒரு சட்டம் என்றதன் அடிப்படையில் செயற்படுவதாக ஸ்ரீநேசன் குற்றம் சுமத்தியுள்ளார்.
மேலும், மாவீரர் தினத்தை ஜே.வி.பி.யினர் அனுஷ்டிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழ் மக்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை என்றால் இதனை இனவாதம் என்றே எண்ண தோன்றும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, மக்கள் தங்களின் மனங்களில் தங்களின் இல்லங்களில் வாழ்விடங்களில் அனுஷ்டிப்பதனை அரசாங்கத்தினால் தடுக்க முடியாது என ஸ்ரீநேசன் குறிப்பிட்டுள்ளார்.