தமிழ் ஓசை
தமிழ் ஓசை

நிசங்க அதிரடி ஆட்டம்! தென்னாபிரிக்காவுக்கு இலங்கையின் வெற்றி இலக்கு 143

0 96

 ரி – 20 உலகக்கிண்ணத் தொடரில் தென்னாபிரிக்கா மற்றும் இலங்கை அணிக்கு இடையில் தற்போது இடம்பெற்று வரும் போட்டியில் தென்னாபிரிக்கா அணிக்கு 143 என்ற வெற்றி இலக்கை இலங்கை அணி நிர்ணயித்துள்ளது.

போட்டியின் நாணயச் சுழற்சியில் தென்னாபிரிக்கா அணி வெற்றி பெற்ற நிலையில் முதலில் துடுப்பெடுத்தாட இலங்கை அணிக்கு அழைப்பு விடுத்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 142 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

இலங்கை அணி சார்பில் அதிரடியாக துடுப்பெடுத்தாடிய பெதும் நிசங்க அதிகபட்சமாக 72 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

ஏனைய வீரர்கள் அனைவரும் சொற்ப ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து வௌியேறினர்.

Leave A Reply

Your email address will not be published.