தமிழ் ஓசை
தமிழ் ஓசை

நாவலர் மணிமண்டபத்தில் முருக பக்திப் பாடல்கள் இசை அர்ச்சனை நிகழ்வு

0 241

இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில், கந்தசஷ்டி விரத புண்ணிய காலத்தில், ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் மணிமண்டபத்தில், பிற்பகல் மூன்று மணி தொடக்கம் நான்கு மணிவரை முருக பக்திப் பாடல்கள் இசை அர்ச்சனை நிகழ்வு  இடம்பெறவுள்ளது.

 இப் பக்தியிசை நிகழ்வு ஓம் தொலைக்காட்சி அலைவரிசையிலும் சிவன் தொலைக்காட்சி அலைவரிசையிலும் ஒளிபரப்பாகவுள்ன. 

அந்தவகையிலே, கந்தசஷ்டி முதலாம் நாளன்று, (05/11/2021 – வெள்ளிக்கிழமை) இசைக் கலைமாணி, பண்ணிசைக் கலாவித்தகர், சங்கீத கலாவித்தகர் செல்வி சந்திரிக்கா கணேஸ்பரன் அவர்களும் கலாவித்தகர் ஹிமாலினி சுகந்தன் அவர்களும் இணைந்து வழங்கும் ‘திருமுருக கீர்த்தனம்’ நிகழ்வு இடம்பெறவுள்ளது. 

கந்தசஷ்டி இரண்டாம் நாளன்று, (06/11/2021 – சனிக்கிழமை) இளம் சைவப்புலவர், திருமுறை நெறிச்செல்வர்  ஜெயராசா அருள்தாஸ் குழுவினர்  வழங்கும் ‘முருக பக்திப் பாடல்கள்’ இசை நிகழ்வு இடம்பெறவுள்ளது.

கந்தசஷ்டி மூன்றாம் நாளன்று, (07/11/2021 – ஞாயிற்றுக்கிழமை) இணுவையூர் ஞான ஏந்தல் மா.ந.பரமேஸ்வரன் குழுவினர் வழங்கும் ‘திருப்புகழ் கச்சேரி’ நிகழ்வு இடம்பெறவுள்ளது.

கந்தசஷ்டி நான்காம் நாளன்று, (08/11/2021 – திங்கட்கிழமை) இணுவில் சிவகாமி அம்மன் அறநெறிப் பாடசாலைக் குழுவினர்  வழங்கும் ‘முருக பக்திப் பஜனை’  நிகழ்வு இடம்பெறவுள்ளது.

கந்தசஷ்டி ஐந்தாம் நாளன்று, (09/11/2021 – செவ்வாய்க்கிழமை) நவாலியூர் கதிர்காம முருகன் பஜனைக் குழுவினர்  வழங்கும் ‘முருக நாம பஜனை’ இடம்பெறவுள்ளது.

கந்தசஷ்டி நிறைவு நாளன்று, (10 /11/2021 – புதன்கிழமை) கந்தரோடை, ஆலடி, வீரகத்தி விநாயகர் பண்ணிசைக் குழுவினர் வழங்கும் ‘முருகா சரணம்’ பஜனை நிகழ்வும் இடம்பெறவுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.