Developed by - Tamilosai
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக நாளை (28) முதல் பஸ் சேவைகள் மட்டுப்படுத்தப்படும் என தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அத்தியவசிய நேரங்களை முன்னுரிமைப்படுத்தி அதற்கான அட்டவணைகளை தயாரிக்குமாறு போக்குவரத்து ஒழுங்குமுறை அதிகாரிகளுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.
வழக்கமான பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்த போதிய டீசல் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சிக்கமான முறையில் வேலை செய்ய வேண்டிய நேரம் இது எனவும் எனவே நாளை காலை முதல் பேருந்து பயண எண்ணிக்கையை குறைக்க முடிவு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.