Developed by - Tamilosai
களனிப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரும், பேலியகொட வித்தியாலங்கார பிரிவெனாவின் தலைவருமான அக்கமஹா பண்டிதர் வெலிமிட்டிவாவே குசலதம்ம தேரரின் இறுதிக் கிரியைகள் நாளை இடம்பெறவுள்ள நிலையில் தேசிய துக்க தினம் அறிவிக்கப்பட்டுள்ளது.
காலஞ்சென்ற குசலதம்ம தேரரின் இறுதிக் கிரியைகள் சுதந்திர சதுக்க வளாகத்தில் இடம்பெறவுள்ளன.
இதற்கமைய கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களிலுள்ள அனைத்து மதுபானசாலைகளும் நாளைய தினம் மூடப்படும் என மதுவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.
அத்துடன் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் இறைச்சிக்காக உயிரினங்களை கொல்லும் இடங்கள், இறைச்சி விற்பனை நிலையங்கள் நாளைய தினம் மூடப்படும்.
இத்தீர்மான யோசனையை பொதுநிர்வாக அமைச்சர் சமல் ராஜபக்ஷ அமைச்சரவையில் சமர்ப்பிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.