Developed by - Tamilosai
கொழும்பின் பல பகுதிகளில் நாளை (04) முதல் நாளை மறுதினம் (05) வரை 10 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
எனவே, கொழும்பு 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளில் நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை மேலும் தெரிவிக்கையில்,
இந்த பகுதிகளுக்கான நீர் விநியோகம் நாளை (04) மாலை 07 மணி முதல் நாளை மறுதினம் (05) அதிகாலை 05 மணி வரை தடைப்படும் என தெரிவித்துள்ளது.
அம்பதலே நீர் சுத்திகரிப்பு மற்றும் விநியோக நிலையத்தில் மேற்கொள்ளவுள்ள திருத்தப் பணிகள் காரணமாவே இந்த நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
நீர் வெட்டு காரணமாக பொது மக்களுக்கு ஏற்படக்கூடிய அசௌகரியங்கள் தொடர்பில் கவலையடைவதாக மேலும் குறிப்பிட்டுள்ளது.