Developed by - Tamilosai
15-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் 27-ந் தேதி ஐக்கிய அரபு எமிரேட்சில் தொடங்கியது. 20 ஓவரில் நடத்தப்பட்ட இப்போட்டியில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங்காங் ஆகிய 6 அணிகள் பங்கேற்றன.
இதில் பாகிஸ்தான்- இலங்கை அணிகள் இறுதி போட்டிக்கு தெரிவாகின. ஆசிய கோப்பையை வெல்வதற்கான இறுதிப்போட்டி நாளை நடக்கிறது. இந்த ஆட்டம் இரவு 7.30 மணிக்கு நடக்கிறது
வெற்றி உத்வேகத்தை இறுதிப் போட்டியிலும் தொடர இலங்கை முயற்சிக்கும். இரு அணிகளும் சமபலம் வாய்ந்து உள்ளதால் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.