Developed by - Tamilosai
நாய் வாலை ஆட்டினாலும், வாலால் நாயை ஆட்டுவிக்கமுடியாது என்பதை புரிந்துகொள்ள வேண்டும். ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி கூண்டோடு வெளியேறினாலும் அரசுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை.”
இவ்வாறு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினரும், இராஜாங்க அமைச்சருமான சனத் நிஷாந்த தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை சேர்ந்த 14 நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசிலிருந்து கூண்டோடு வெளியேறினாலும் அரசு பக்கம் 140 எம்.பிக்கள் இருப்பார்கள். இதனால் சு.கவின் வெளியேற்றம் அரசுக்கு பாதிப்பாக அமையாது.
நாய் வாலை ஆட்டினாலும், வாலால் நாயை ஆட்டுவிக்க முடியாது என்பதை, வாலால் நாயை ஆட்டுவிக்க முடியும் என நினைத்துக்கொண்டிருப்பவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். ” – என்றார்.
அதேவேளை, அரசிலிருந்து வெளியேறுவது தொடர்பில் சில்லறைத்தனமான அரசியல் வாதிகள் தமக்கு ஆலோசனை வழங்க வேண்டியதில்லை என சுதந்திரக்கட்சி உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்