தமிழ் ஓசை
தமிழ் ஓசை

நாம் நாட்டுக்கும் மக்களுக்குமே பொறுப்புக் கூறவேண்டும் – விதுர விக்ரமநாயக்க

0 129

சௌபாக்கிய நோக்கில் எந்த இடத்திலும் பொது வளங்கள் விற்பனை செய்யப்படும் என நாட்டுக்கு கூறவில்லை என ராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க (Vidura Wickramanayaka) தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் யுகதனவி உடன்படிக்கையை அடிப்படையாக கொண்டு கூட்டு பொறுப்பை மீறியதாக பேசுவதை விட அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய பொறுப்புறுதியை மீறியமை சம்பந்தமாக தேடி ஆராய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

ஹொரணையில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

 வெளிநாடுகளுக்கு வழங்கப்பட்டவற்றை மீண்டும் திரும்ப பெறுவோம் என நாம் மேடைகளில் கூறினோம். இதனால், நாம் நாட்டுக்கும் மக்களுக்குமே பொறுப்புக் கூறவேண்டும்.எனவும் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.

அதேவேளை அண்மையில் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டிருந்த அமைச்சர் விமல் வீரவங்ச, யுகதனவி உடன்படிக்கை பற்றி அமைச்சரவையில் பேசப்படவில்லை என்பதால், அது தொடர்பில் கூட்டுப் பொறுப்பு எதுவும் மீறப்படவில்லை என தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.