தமிழ் ஓசை
தமிழ் ஓசை

நான் பௌத்தத்திற்கு எதிரானவன் அல்லன்: யாழ்.மாநகர முதல்வர் மணிவண்ணன்

0 290

 நான் பௌத்த மதத்திற்கு எதிரானவனும் அல்லன்;  மதவாதியும் அல்லன் என யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

யாழ். மாநகர சபையின் மாதாந்த அமர்வு  இன்று (புதன்கிழமை) இடம்பெற்றது.

இதன் போது, நாக விகாரையின் விகாராதிபதி ஆரியகுளத்தின் புனரமைப்புப் பணிகளை நிறுத்துமாறு கோரி மாநகர முதல்வருக்கு, அனுப்பியுள்ள கடிதம் தொடர்பில் சபையில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:

 நான் ஒரு மதவாதி அல்லன்; அத்தோடு பௌத்த மதத்திற்கு எதிரானவனும் அல்லன். நான் இந்து மதத்தைச் சேர்ந்தவன்.

அதனால் ஏனைய மதங்களுக்கு எதிரானவன் அல்லன்.  என்னை மதவாதி எனச் சித்திரிக்கும் வகையில் நாகவிகாரை விகாராதிபதியால் யாழ். மாநகர முதல்வர் என எந்தவித மரியாதையும் வழங்காது கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

எனவே, என்னைத் தவறான புரிதலுடன் இந்தக் கடிதத்தை அனுப்பியுள்ளீர்கள் என விகாராதிபதிக்குத் தெரிவிக்க விரும்புகிறேன்.

ஆரியகுளம்பகுதி புனித பிரதேசமாக இருக்க வேண்டும். நான் ஒரு இந்து மதத்தைச் சேர்ந்த ஒரு தமிழன்.

அந்த வகையில் நாம் எதிர்காலத்தில் அடையக்கூடிய தமிழ்த் தேசியத்தை ஒரு மதச் சார்பற்ற  அனைத்து மத மக்களும் தாம் விரும்பிய மதத்தை வழிபடுகின்ற அல்லது தங்களுடைய மத அனுஷ்டானங்களில் ஈடுபடுகின்ற இடமாக தமிழ்த் தேசம் கட்டி அமைக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.