Developed by - Tamilosai
டீசலை ஏற்றிய கப்பலொன்று எதிர்வரும் இரண்டு நாட்களுக்குள் நாட்டை வந்தடையவுள்ளதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
பெட்ரோலை ஏற்றிய கப்பலொன்றுக்காக முன்பதிவு நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், தொடர்ந்தும் மக்கள் எரிபொருள் மற்றும் எரிவாயுவை பெற்றுக்கொள்ள முடியாமல் நாடளாவிய ரீதியில் வரிசைகளில் காத்திருக்கின்றனர்.