தமிழ் ஓசை
தமிழ் ஓசை

“நாட்டை மீண்டும் முடக்க வேண்டிய நிலை ஏற்படும்”

0 84

நாடு  மீண்டும் முடக்கப்படலாம் என சுகாதார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.

பொதுமக்கள், சுகாதார வழிகாட்டல்களைச் சரியான முறையில் பின்பற்றாவிட்டால், பாடசாலைகளையும், நாட்டையும் மீண்டும் மூடவேண்டிய நிலை ஏற்படக்கூடும் எனப் பிரதிச் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

நாட்டிலுள்ள அனைத்துப் பாடசாலைகளின் ஆரம்பப் பிரிவுகளும், ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், 06 மாதங்களின் பின்னர் 10 முதல் 13 வரையான தரங்கள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

நாட்டின் சுகாதார நிலைமையைப் பாதுகாப்பது அவசியமானதாகும்.

அத்துடன், சுகாதார விதிமுறைகளுக்கு அமைவாக  அனைவரும் செயற்பட வேண்டும்.
 இந்த நிலைமை மீண்டும் மோசமானால், நாட்டை மீண்டும் முடக்க வேண்டிய நிலை ஏற்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.