Developed by - Tamilosai
ஈஸ்டர் தாக்குதலை முன்கூட்டியே அறிந்து நாட்டை விட்டுவெளியேறும் அளவிற்கு பலவீனமான நபர் தான் அல்ல என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் குறித்து தான் ஆரம்பத்தில் அறிந்ததாகத் தெரிவிக்கப்படும் கருத்துக்கள் முற்றிலும் பொய்யானவை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இந்தச் சம்பவத்தை அரசாங்கம் என்ற ரீதியில் பொறுப்பேற்கத் தயாராக இருப்பதாக தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரி, ஒருபோதும் தனிப்பட்ட முறையில் பொறுப்பேற்கப் போவதில்லை என்றும் தெரிவித்தார்.
இதேவேளை, இரசாயன உரத்திற்குத் தடை விதித்து சேதனப் பசளைக்குச் செல்வது பெரும் பிரச்சினையை தோற்றுவிக்கும் என்பதனால் அத்திட்டத்தை கட்டம் கட்டமாக செயற்படுத்த வேண்டும் என ஜனாதிபதியிடம் கோரியதாகவும் மைத்திரி குறிப்பிட்டார்.
இருப்பினும் சேதனப் பசளை தொடர்பாக ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொள்வதற்குத் தனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார்.