தமிழ் ஓசை
தமிழ் ஓசை

“நாட்டு மக்களை இரு தினங்கள் இருட்டில் வைத்திருக்க முயல்வது எத்தகைய அநீதியான முடிவாகும்”

0 181


நாட்டு மக்களை இரு தினங்கள் இருட்டில் வைத்திருக்க முயல்வது எத்தகைய அநீதியான முடிவாகும் என ஆளும் தரப்பு பிரதம கொறடா நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ விசனம் வெளியிட்டுள்ளார்.கெரவலப்பிட்டிய மின் உற்பத்தி நிலையம் தொடர்பில் கடுமையான தொழிற்சங்க நடவடிக்கையில் இறங்கப் போவதாக தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

இது தொடர்பாக ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்;

 தொழிற்சங்கங்கள் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் சரியானது என்று சொல்ல முடியாது.

 தொழிற்சங்கம் என்பது அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை உள்ளடக்கியதாகும். 

அண்மையில் துறைமுக தொழிற்சங்கங்கள் கொழும்பு துறைமுக கிழக்கு முனையத்தை வழங்குவதை எதிர்த்தன.

இதன் விளைவாக கிழக்கு முனையத்திற்குப் பதிலாக அதனை விட பெரிய மேற்கு முனையம் வழங்கப்பட்டது.

 தொழிற்சங்கங்கள் அரசியல் கோணத்தில் இல்லாமல் நாடு முகங்கொடுத்துள்ள நெருக்கடி நிலை குறித்தும் சிந்தித்து செயற்பட வேண்டும்.

 ஒரு அலகு மின்சாரத்தின் விலை குறைவதாக இருந்தால் தொழிற்சங்கங்கள் ஏன் அதனை எதிர்க்கின்றன? 

குறைந்த விலையில் மின்சாரம் கிடைக்க அரசாங்கம்  நடவடிக்கை எடுத்தால் அது ஊழல் ஆகாது. 

தொழிற்சங்கங்கள் அதிக விலைக்கு சார்பாக இருந்தால் அதன் பின்னணியில் அரசியல் நோக்கம் இருக்கிறது.

 தொழிற்சங்கங்கள் இந்த நாட்டு மக்களை இரண்டு நாட்களுக்கு இருட்டில் வைத்திருக்க முயல்கின்றன என்றால் அது எத்தகைய அநீதியான முடிவாகும்.

 இதை அறிவுள்ள நாட்டு மக்கள் கவனமாகப் பார்க்க வேண்டும். இந்த நேரத்தில் மின்சார விலையை குறைக்கும் அரசாங்கத்தின்  திட்டம் மக்களுக்குக் கிடைத்த வெற்றியாகும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.