தமிழ் ஓசை
தமிழ் ஓசை

நாட்டுக்குள்ளேயே முழுமையான சீமெந்து உற்பத்தி-பஸில் ராஜபக்ச

0 455

நாட்டுக்குள்ளேயே முழுமையான சீமெந்து உற்பத்தியை மேற்கொள்வது தொடர்பில் அவதானம் செலுத்தப்படுவதாக நிதியமைச்சர் பஸில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நிர்மாணத்துறையில் கடந்த இரண்டு வருடக்காலப் பகுதியில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக, சீமெந்துக்கான கேள்வி அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

நாட்டுக்குள்ளேயே முழுமையான சீமெந்து உற்பத்தியை மேற்கொள்வது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

அத்தியாவசியப் பொருட்களுக்கான தட்டுப்பாடுகள் எவையும் சந்தையில் காணப்படவில்லையெனவும் மருந்துப் பொருட்கள் தவிர்ந்த பல பொருட்களுக்கான நிர்ணய விலையை நீக்குவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்தைக் கொண்டு தேவையற்ற பயன்களை அடைய முயற்சிக்க வேண்டாமென்றும் வர்த்தகர்களிடம் நிதியமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.