Developed by - Tamilosai
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் எதிர்வரும் சில நாட்களுக்கு மழையுடனான வானிலை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
அதற்கமைவாக , மத்திய, சப்ரகமுவ, வடமத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களில் எதிர்வரும் 36 மணித்தியாலங்களுக்கு 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.
இதேவேளை, நாட்டின் மேற்கு மற்றும் தெற்கு கரையோரப் பிரதேசங்களில் காலை வேளையில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகிறது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாகப் பலத்த காற்றும் வீசக்கூடும்.
அத்துடன் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறும் பொதுமக்களை திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.