தமிழ் ஓசை
தமிழ் ஓசை

நாட்டில் 21 ஆம் திகதி முதல் ரயில்களை இயக்க நடவடிக்கை

0 136

 மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் தளர்த்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், ரயில்களை சேவையில் ஈடுபடுத்துவதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, எதிர்வரும் 21 ஆம் திகதி 128 ரயில்கள் சேவையில் இணைத்துக்கொள்ளப்படும் என ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

கண்டி, மாத்தறை, பெலியத்த, காலி, மற்றும் சிலாபம் ஆகிய பகுதி களுக்கு ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

Leave A Reply

Your email address will not be published.